திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு. இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக…