Take a fresh look at your lifestyle.

ஆர்யாவை வில்லனாக இயக்கும் பா.ரஞ்சித்!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படமான ‘தங்கலான்’ வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை பா. ரஞ்சித் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பா. ரஞ்சித் கடந்த 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெட்டுவம்’ என்ற புதிய படத்தை அறிவித்தார்.

இந்த வரவிருக்கும் படத்திற்காக பா. ரஞ்சித் ‘அட்டகத்தி’ தினேஷுடன் மீண்டும் இணைந்துள்ள நிலையில், ‘வெட்டுவம்’ படத்தில் ஆர்யா சக்தி வாய்ந்த வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

இது பா. ரஞ்சித் மற்றும் ஆர்யா இடையேயான கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ‘சார்பட்டா பரம்பரை’ பிளாக்பஸ்டரில் இணைந்து பணியாற்றினர். வரவிருக்கும் ‘சார்பட்டா 2’ படத்திலும் அவர்கள் இணைய உள்ளனர்.

‘சார்பட்டா 2’ படத்திற்கு செல்லும் முன் ‘வெட்டுவம்’ படத்தை முடிக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘வெட்டுவம்’ படத்தின் கதைக்களம் சிறைச்சாலை பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு கிராமப்புற கும்பலை மையமாகக் கொண்டது. சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு, ‘தங்கலான்’ ரிலீசுக்கு முன் ‘வெட்டுவம்’ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்