‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், வெற்றிமாறன் எழுதிய ‘அதிகாரம்’, லோகேஷ் கனகராஜின் கதையுடன் ‘பென்ஸ்’, வெங்கட் இயக்கத்தில் ‘ஹண்டர்’ உள்ளிட்ட ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படங்கள் தயாராகி வருகிறது.
சமீபத்திய செய்தி என்னவென்றால் பிளாக்பஸ்டர் காமெடி படமான ‘காஞ்சனா’வுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
முனி/காஞ்சனா படங்களின் நான்கு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் ஐந்தாவது பாகத்திற்கு ‘காஞ்சனா 4’ அல்லது ‘முனி 5’ என்று தற்காலிகமாக தலைப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருவதாகவும், படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என்றும் அவர் ஏற்கெனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா 4’ அல்லது ‘முனி 5’ இல் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் முன்னணி நடிகராக பல வேடங்களில் நடிக்க உள்ளார்.
தயாரிப்பு விவரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும்.
இதனிடையே ராகவா லாரன்ஸ் தனது பேனரின் கீழ் பல திட்டங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
– தேஜேஷ்