Take a fresh look at your lifestyle.

‘சில்லுனு ஒரு காதல்’ இரண்டாம் பாகத்தில் கவின்!

கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், காமெடிக் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படத்தை இயக்கிய கிருஷ்ணா ‘நெடுஞ்சாலை’, ‘பத்து தல’ ஆகிய படங்களை இயக்கினார். இதனையடுத்து, தற்போது ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமான கவின், பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார்.

அதன் பிறகு ‘லிஃப்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சம்பாதித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.