Take a fresh look at your lifestyle.

தனுஷ் படத்திற்காக உயிரைப் பணயம் வைத்த கேமராமேன்!

தனுஷ் நடித்து வரும் `குபேரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் `குபேரா’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த ஸ்டண்ட் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஸ்டண்ட் காட்சியின் ஒரு முக்கியக் காட்சியை படமாக்குவதற்காக கேமராமேன் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வினாடி கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக கேமராமேன் தனது உயிரை பணயம் வைத்து பணி செய்த இந்த வீடியோ பார்ப்பவர்களை மெயஂசிலிர்க்க வைக்கிறது.

– தேஜேஷ்