Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

நடிகர் சங்கத்தின் துவக்க விதை விழுந்த இடம்!

தென்னிந்திய நடிகர் சங்கம் துவங்க, தம்பிகளுடன் ஆலோசனை செய்யும் கலைவாணர் அவருடன் மக்கள் திலகம், நடிகர் திலகம், இயக்குநர் கே சுப்ரமணியம் ஆகியோர் இந்தப் புகைப்படத்தில் உள்ளனர்.

‘கவிக்குயில்’களின் அரிய சந்திப்பு!

லதா மங்கேஷ்கரின் கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

சகோதரிக்குப் பணிவான வணக்கம்!

தனது மகள் சாந்தியின் திருமணத்திற்கு சகோதரியுடன் வந்திருந்த பாடகி லதா மங்கேஷ்கரை பாசத்துடன் பணிந்த வணக்கத்துடன் வரவேற்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’க்கு மரியாதை!

வெள்ளிவிழா கண்டு பெரும் வெற்றியடைந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு மாலை கொடுத்துக் கௌரவிக்கிறார் படத் தயாரிப்பாளரான நாகிரெட்டி.

‘ஆயிரம் நிலாவே வா’வைப் பாடிய போது ‘இளைய நிலா’!

பேசும் படம்: * பால்ய காலமும், இளமைக்காலமும் எப்போதும் தனி அழகு! எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' படத்திற்கான 'ஆயிரம் நிலாவே வா' பாடல் ஒலிப்பதிவின் போது, பி.சுசீலா அவர்களுடன் இளமைக்கால 'இளைய நிலா' எஸ்.பி.பி!

‘இசை’மயமான விளம்பரம்!

1943-ம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி என்று அந்தக் கால நட்சத்திரங்களுடன் வெளியான இசைமயமான விளம்பரம்.

‘சின்னத் தம்பி’ படப்பிடிப்பு!

கோபி செட்டிப்பாளையத்தில் 'சின்னத் தம்பி' படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில் பிரபு, குஷ்பு மற்றும் இயக்குநர் பி வாசு ஆகியோர் உள்ளனர்.

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் நடிகர் பட்டாளம்!

ஒருமுறை 'தவப்புதல்வன்' படப்பிடிப்பின்போது முக்தா சீனிவாசனுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர் சி.வி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

அதோ அந்த பறவை போல…!

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு இடைவேளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நம்பியாருக்கும் நடுவில் நிற்பவர் நடிகர் மா.க.காமாட்சி நாதர்.

வாழ்த்தும் அண்ணா!

நடிகர் திலகம் சிவாஜியின் மீது பாசம் கொண்டவரான அண்ணா, சிவாஜி குடும்பத்தினரை மனைவியுடன் சந்தித்து வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்.