Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையுடன் ஸ்ரீதேவி!

-1970-ம் ஆண்டில் ஸ்ரீ தேவியின் சொந்த ஊர் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் அவரது அம்மா ராஜேஸ்வரியுடன் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.

சிரித்து வாழ வேண்டும்!

தி.மு.க.வின் முன்னணித் தலைவராக இருந்தவரான கே.ஏ. மதியழகனுடன் படப்பிடிப்பு இடைவேளையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி.

கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன்.

நடிகர் திலகமும் நாட்டியத் திலகமும்!

பேசும் படம் : பத்மா சேஷாத்ரியின் ‘பாரத் கலாசார் சபா’ சார்பில் நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ‘விஸ்வ கலா பாரதி’ பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். பட்டத்தை அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

பாடல் ஒலிப்பதிவின்போதே ரசித்துச் சிரித்த இளையராஜா!

இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு ‘எட்டணா இருந்தா’ பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

இளைய நினைவுகள்!

பேசும் படம்: மகேந்திரன், இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பல. ஒரு பாடலுக்காக எழுதிய வரிகளை வாலி இயக்குநர் மகேந்திரனிடம் காட்ட, இளையராஜா புன்னகையுடன் ரசிக்கிற காட்சியும் தனி ரசனையுடன் தானிருக்கிறது!

எம்.ஜி.ஆரும், இளந்தமிழும்!

பேசும் படம்: எம்.ஜி.ஆருக்கும், பத்திரிகையாளரான தமிழ்வாணனுக்கும் இடையில் நட்புறவு உண்டு. அவருடைய மகனான லேனா தமிழ்வாணன் ஒரு விழாவில் எம்ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் இசையமைப்பாளரான குன்னக்குடி…

பாசப் பிணைப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தனது சகோதரராகப் பாவித்து, நடிகை வஹீதா ரஹ்மான் ரக்சா பந்தன் சரடு கட்டிவிடும் புகைப்படம். உடனிருந்து ரசிப்பது நடிகர் ஜானி வாக்கர்.

இசையால் வசமாகா இதயம் எது?

பேசும் படம்: காவிரி ஆற்றின் கரையில் இருக்கும் திருவையாற்றில் நடந்த தென்னகப் பண்பாட்டு மைய விழாவில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும் தமிழக முதல்வரான எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்கள். அப்போது ராஜீவுக்கு தஞ்சையின் இசை அடையாளமான வீணையைப்…