வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் ‘மைனர்’. அண்மையில், இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டு, கோலாகலமாக நடைபெற்றது.
இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளிப் பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான்.
அந்தக் காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன், ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.