‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான அதிரடித் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
விமர்சனங்கள் நல்ல விதமாகவும், ஏடாகூடமாகவும் இருந்தபோதும். வசூல் ரீதியாக இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
வெளியான குறுகிய காலத்திலேயே, உலகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘குட் பேட் அக்லி’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது.
வரும் 8 ஆம் தேதி முதல் நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்கள் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வீட்டில் இருந்தபடியே பார்த்து கொண்டாடலாம்.
தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்து நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அவர் நல்லவராக இருந்தது போதும்.
இனி கெட்டவராக மாறப்போகிறார், விஷயங்கள் மோசமாகப் போகப்போகின்றன. மே 8 முதல் நெட்ஃபிக்ஸில் ‘குட் பேட் அக்லி’ பாருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் தெறிக்க விட்ட அஜித், ஓடிடி தளத்திலும் அதகளம் செய்வாரா? என பொருத்திருந்து பார்ப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி.