Take a fresh look at your lifestyle.

விரைவில் தொடங்கும் ’தக் லைஃப்‘ படப்பிடிப்பு!

‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், தற்போது ‘கல்கி’ படத்தில் மும்முரமக இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது கமல்ஹாசனின் 234 வது படம்.

‘தக் லைஃப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 18 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில், படப்பிடிப்புக்கு இடைவெளி கொடுத்து விட்டு, பிரச்சாரம் செய்ய உள்ளார்.

‘தக்லைஃப்’ முடிந்ததும், எச். வினோத் டைரக்ஷனில் நடிப்பார் என தெரிகிறது.

-பாப்பாங்குளம் பாரதி.