அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அதிக வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்ததால், அவற்றை நீக்குமாறு இந்திய திரைப்பட தணிக்கை வாரிய குழுவினர் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து 4 நிமிட காட்சிகளை நீக்கப்பட்டு மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் இருந்தது. அதோடு, கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு U/A சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
– தேஜேஷ்