Take a fresh look at your lifestyle.

குடும்பத்துடன் ஓட்டலில் உற்சாகமாக ஆடிய அஜித்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. முதலில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. பாடல்கள் நீங்கலாக முழுப்படமும் அஜர்பைஜான் நாட்டிலேயே படமாக்கப்பட உள்ளது.

அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அர்ஜுன், பிரியா பவானி சங்கர், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம், பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் தன் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துபாயில் உள்ள ஓட்டலில் ஊழியர்களுடன் உற்சாகமாக அஜித் நடனம் ஆடுகிறார். பின்னணியில் ‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சுக்கோ சியர்ஸ்’ பாடல் ஒலிக்கிறது.

இந்த வீடியோவில் அஜித் மனைவி ஷாலினியும் இருக்கிறார். குடும்பத்துடன் அஜித் கப்பலில் செல்லும் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.