Take a fresh look at your lifestyle.

தயாராகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்!

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2009 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சீமான், தருண் கோபி, மணிவண்ணன், உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

குடும்பக் கதையையும், பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்தப் படம் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்தப் படங்களுக்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது.

இந்த நிலையில், முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2-ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி. ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

– தேஜேஷ்