Take a fresh look at your lifestyle.

‘நாகபந்தம்’: பிரம்மாண்டமாக உருவாகும் க்ளைமாக்ஸ்!

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’ படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.

இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டியும் நிஷிதா நாகிரெட்டியும் தயாரித்து வருகின்றனர்.

குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது.

இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

‘நாகபந்தம்’ படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார்.

சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.