Take a fresh look at your lifestyle.

படம் பார்த்ததும் உங்களுக்குள் புன்னகை பூக்கும்!

நயன்தாரா நெகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹாய்’. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து  நடித்துள்ளார்.

‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஆகஸ்ட் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற ‘ஹாய்’ திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு படத்தைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, “இது மிகவும் ஸ்வீட்டான படம். படத்தைப் பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்கள் முகத்தில் ஒரு ஸ்மைல் இருக்கும்.

படத்தில் டிராமா அதிகமாக இருக்காது என்றும், அதேநேரத்தில் மிகவும் அழகான மற்றும் இனிமையான அனுபவத்தை வழங்கும்.

‘ஹாய்’ திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். மீண்டும் மீண்டும் பார்க்கலாம், அந்த மாதிரி இந்த படம் இருக்கும்.” என்றார்.