Take a fresh look at your lifestyle.

மீண்டும் வில்லியாக நடிக்கும் த்ரிஷா!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் த்ரிஷா வில்லியாக நடிக்கவுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

‘கொட்டுக்காளி’ சூரியின் நடிப்பு வணங்கத்தக்கது!

சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி, இயக்குநர் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் என ‘கொட்டுக்காளி’ படத்துக்கு இயக்குநர் பாலா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

‘ஆரத்தி’க்கு வரவேற்பு: மகிழ்ச்சியில் மாளவிகா!

சமீபத்தில் வெளிவந்த தங்கலான் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்யா மேனன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியது.

வாழை – உண்மைச் சம்பவம் அடிப்படையிலான கதை!

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், அவர்கள் கடந்து வந்த வேதனைகளையும் சொல்வதாக இருந்து வருகின்றன மாரி செல்வராஜின் படங்கள். அவர் தந்த ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களின் களங்கள் வெவ்வேறாயினும், அக்கதையின் அடிநாதம் அடிமைப்பட்டுக்…

‘1000 பேபிஸ்’ சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சஸ்பென்ஸ், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், புதுமையான அனுபவம் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது '1000 பேபிஸ்' சீரிஸ். விரைவில் இந்த மலையாள சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

‘பிசாசு – 2’ விரைவில் திரைக்கு வரும்!

அண்மையில் இயக்குநர் மிஷ்கினிடம் 'பிசாசு – 2' படத்தைக் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குநர் மிஷ்கின் “'பிசாசு – 2' விரைவில் திரைக்கு வரும். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் உங்கள் ஆன்மாவை…

‘ஏழுமலை’ இரண்டாம் பாகத்தை உருவாக்கும் அர்ஜுன்!

அர்ஜுன் நடித்து, இயக்கிய 'ஏழுமலை' என்ற திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. அர்ஜுனுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து 'ஏழுமலை' இரண்டாம் பாகத்தை உருவாகவுள்ளார் அர்ஜுன்.

மிஷ்கின் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

2023-ம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான ‘கெவி’!

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ளது ‘கெவி’ திரைப்படம்.