Take a fresh look at your lifestyle.

‘பிசாசு – 2’ விரைவில் திரைக்கு வரும்!

இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பூர்ணா, சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் பிசாசு – 2 திரைப்படத்தை இயக்கினார் மிஷ்கின்.

ஆனால், இரண்டு ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

“பிசாசு – 2 விரைவில் திரைக்கு வரும். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் உங்கள் ஆன்மாவை தொடும் வகையில் உருவாகியுள்ளது.

என் தயாரிப்பாளர் சிறிய பிரச்னையில் உள்ளார். திரைப்படத்தில் முதலீடு செய்தவர்களுக்கே எப்போது படம் வெளியாகும் எனத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் பிசாசு – 2 தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளதால் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.