Take a fresh look at your lifestyle.

மிஷ்கின் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘சைக்கோ’ திரைப்படத்தை இயக்கினார். இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியானக் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு துவங்கி, விஜய் சேதுபதியை வைத்து ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.

முகம் முழுவதும் அடர்த்தியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ‘ட்ரைன்’. இந்தப் படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்பௌ உருவாக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.