Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

நடிகர் திலகத்திடம் பெற்ற நல்லாசி!

திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் வளர்ந்த கிரேசி மோகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் விருதும் பெற்று இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த மதிப்பு!

இரட்டை இலையின் ஒரு இலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவமும், மறு இலையில் திண்டுக்கல்லில் வெற்றிப்பெற்ற மாயத்தேவர் உருவமும் இடம்பெற்ற அழகானகாட்சி இது.

அண்ணாவுடன் என்.எஸ்.கே நாடகக் குழுவினர்!

டி.கே.சண்முகம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே., ஜுபிடர் சோமசுந்தரம், ஜுபிடர் மொய்தீன், கே.ஆர்.இராமசாமி மற்றும் என்.எஸ்.கே நாடக மன்றத்தினர்.

‘சக்சஸ்’ கொடுத்த பராசக்தி டீம்!

‘பராசக்தி’ படத்திற்காக 'சக்சஸ்' என்று முதல் டேக்கிலேயே சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வசனம் பேசி நடித்த சிவாஜிகணேசனோடு அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பெருமாள், கலைஞர், சகஸ்கரநாமம் ஆகியோர்.

‘மணிமகுடம்’ துவக்க விழாவில் கலைஞர்கள்!

பூம்புகார் கூட்டிணைப்பில் எஸ்.எஸ்.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'மணிமகுடம்' படத் துவக்க விழாவில் கலைஞர், எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, விஜயகுமாரி, நாகேஷ்.