Take a fresh look at your lifestyle.

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையுடன் ஸ்ரீதேவி!

பேசும் படம்:

‘பதினாறு வயதினிலே’யில் மயிலு என்ற பாத்திரத்தில் நமக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. கிராமத்துப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்திய ஸ்ரீதேவிக்கு நவநாகரீக பாத்திரத்திற்கும் அப்படியே பொருந்தியது.

ரஜினி, கமல் என அத்தனை நாயகர்களுடனும் நடித்த ஸ்ரீதேவி, ‘நம் நாடு’, ‘என் அண்ணன்’ என எம்.ஜி.ஆர் படத்திலும், ‘வசந்த மாளிகை’, ‘பாரத விலாஸ்’ என சிவாஜியுடனும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்ரீதேவியின் சொந்த ஊர் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி.

-1970-களில் அவரது அம்மா ராஜேஸ்வரியுடன் மீனம்பட்டியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது எடுக்கப்பட்ட படம்.

நன்றி: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.