Take a fresh look at your lifestyle.

அதிரடி ‘ராப்’ பாடலுக்கு விஜய் ‘டான்ஸ்’!

இந்திய சினிமா உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘இளையத் தளபதி’ விஜய்யின் ‘ஜன நாயகன்’.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அரசியல் கலந்த ஆக்ஷன் திரில்லர் களத்தில் உருவாகி வருகிறது.

விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜன நாயகன்’ குறித்து ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற ராப் பாடகரும், பாடலாசிரியருமான ஹனுமன்கின்த் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் அதிரடியான ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை அவரே தெரிவித்துள்ளார்.

“நான் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். அனிருத் ரவிச்சந்தர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்” என்று ஹனுமன்கின்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப்பாடல் குறித்து வேறு தகவல்கள் கசியவில்லை.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி பகுதியில் நடந்து வருகிறது.

அங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற ஷுட்டிங்கில் விஜய் நேற்று பங்கேற்றார். ஷுட்டிங் நடக்கும் இடம் கரடு முரடானது. சரியான சாலை வசதி கிடையாது.

பட்லங்காடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் தங்கியுள்ள விஜய், படப்பிடிப்பு தளத்துக்கு ஜீப்பில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 50-க்கும் மேற்பட்ட காவலாளிகள், பவுன்சர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.