Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவில் சாதியப் பாகுபாடு அதிகம் உள்ளது!

நடிகர் கலையரசன் வேதனை

இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் ‘டிரெண்டிங்’.

சோஷியல் மீடியா குடும்பத்திற்குள் நுழைந்து, எந்தளவு வாழ்க்கைக்குள் சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை, பரபர சம்பவங்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் அழுத்தமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இதில், பிரேம்குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நடிகர் கலையரசன் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

“என் கேரியரில் ‘டிரெண்டிங்’ மிக முக்கியமான படமாக இருக்கும். நான் ஹீரோவாக பல படங்கள் செய்துள்ளேன். அதில் ‘டிரெண்டிங்’ வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும். சிவராஜ் இந்தக் கதையைச் சொன்னபோது எல்லோருக்கும் பிடித்தது.

இயக்குநர் சிவராஜை நாங்கள் “நோலன்” என்று தான் கூப்பிடுவோம். அவரைப் பார்த்தால் போலீஸில் இருந்தவர் போலவே தெரியாது. மிகத் திறமையானவர்.

குறைந்த ஆர்டிஸ்ட் வைத்து 2 மணி நேரம் உட்கார வைப்பது ஈஸியான விசயமில்லை, அதை சிவராஜ் செய்துள்ளார்.

மியூசிக் கேமரா, நடிப்பு எல்லாம் சேர்ந்து தான் ஒரு சினிமாவில் மேஜிக் நடக்கும்.

சாம் சிஎஸ் ரொம்ப பிஸியாக இருந்தார், ஆனால் நாங்கள் கேட்டதற்காக இசையமைத்துக் கொடுத்தார். பிரவீன் அவரோட சொந்தப்படம் போல அக்கறை எடுத்துக்கொண்டு செய்தார். அவர்கள் இருவரால்தான் இப்படத்தில் மேஜிக் நடந்துள்ளது.

என் மனைவி பிரியா தான் உடை அலங்காரம் செய்துள்ளார். இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். 

தமிழ்த் திரைத் துறையில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதியப் பாகுபாடு மிக மோசமாக உள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. சிலர் என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்.

நடிகர் கலையரசனின் இந்தக் கருத்து திரையுலக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

****

படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள்:

****
தயாரிப்பு நிறுவனம் – Ram film factory
தயாரிப்பு – மீனாட்சி ஆனந்த்
எழுத்து இயக்கம் – சிவராஜ்
இசையமைப்பாளர் – சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு – பிரவீன் பாலு
கலை இயக்கம் – அருண்
எடிட்டிங் – நாகூரன் ராமச்சந்திரன்
பாடல் வரிகள் – குட்டி ரேவதி, கார்த்திக் நேத்தா
மக்கள் தொடர்பு – Aim சதீஷ், சிவா

 #ActorKalaiyarasan | #Kollywood