‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா, உச்சத்தில் இருக்கும்போதே பல சர்ச்சைகளில் சிக்கியவர். காதல் விவகாரமும் அதில் ஒன்று.
சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் அவர், இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா, சினிமாக்களில் நடித்து வருகிறார். சொந்தமாக படங்களைத் தயாரிக்கும் பணிகளிலும் அவர் ‘பிஸி’ யாக இருக்கிறார்.
இந்த நிலையில் நயன்தாராவின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால் சில மணி நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
அந்தப் பதிவில், ‘‘குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும். உங்கள் கணவருடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல. என்னை விட்டுவிடுங்கள். நான் ஏராளமான பிரச்சனைகளை உங்களால் அனுபவித்து விட்டேன்’’ என்று அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்தது.
இது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவை ஏன் நயன்தாரா போட வேண்டும்? அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே என்ன விவகாரம்? என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.