Take a fresh look at your lifestyle.

ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை!

நடிகர் அர்ஜூன் பேச்சு

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.  

இப்படம்  நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிகை, ஊடக  மற்றும் பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் அர்ஜூன், “எனக்கு இது மிக முக்கியமான படம். எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான்.

தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்ததாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாகச் சொன்னார். எல்லாமே படத்திற்காகத்தான்.

படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர்தான், இவர் தான் என்றார்கள்.

ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோக்கள். பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ.

ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை. இன்னும் அவர் வளர வாழ்த்துகள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன்.

நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்கவேண்டும்” என்றார்.