கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள்.
இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும், சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்திருக்கிறது.
‘இதுவரை அறியப்படாத பிரதேசத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபாஸ்’ – என ‘தி ராஜா சாப்’ படத்தினை தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறார் பிரபாஸ்.
இது அவரது நடிப்பில் வெளியாகும் முதல் மற்றும் முழுமையான திகில் பொழுதுபோக்கு படமாகும். மேலும் இது அவரது வளர்ந்து வரும் பயணத்தையும், கதை சொல்லலுக்கான அச்சமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்.
இப்படத்தின் முதல் மோசன் போஸ்டர் – இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளையும், பழைய பாணியிலான வசீகரத்தின் கலவையையும் சுட்டிக்காட்டியது. அத்துடன் அனைவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்த்தது.
நகைச்சுவை மற்றும் உணர்வு பூர்வமான படைப்புகளுக்காக தனித்துவமான பெயரை சம்பாதித்திருக்கும் இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி ராஜா சாப்’ ஆச்சரியமான பொழுதுபோக்குடன் கூடிய ஒரு திகில் படமாகத் தயாராகி இருக்கிறது.
இப்படத்தின் போஸ்டர்கள் முதல் காட்சிகள் வரை சுவராசியத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. இதுவரை ஒவ்வொரு அம்சமும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சமரசமற்ற தயாரிப்பு மதிப்பீடுகளுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார்.
பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய மூவரும் ‘தி ராஜா சாப்’பின் அமானுஷ்யமான அதே தருணத்தில் வண்ணமயமான உலகிற்கு வசீகரத்தையும், நேர்த்தியையும், புத்துணர்ச்சியையும் இணைத்திருக்கிறார்கள்.
டிசம்பர் மாதம் இந்திய சினிமாவிற்கு ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் சீசனாகும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘தி ராஜா சாப்’ தன்னை ஒரு கேம் சேஞ்சராக நிலை நிறுத்துகிறது.
இதுவரை வெளியான ஒவ்வொரு தகவலும் இந்தப் படத்தைப் பற்றிய பரப்பரப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் டீசர் வெளியாக இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக ‘தி ராஜா சாப்’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இது படம் மட்டுமல்ல.. முழுமையான திகிலான அனுபவத்தை திரையரங்குகளில் வழங்கும் என உறுதி அளிக்கிறது.
சூப்பர் நேச்சுரல் திரில்லிங் – ரொமான்டிக் காட்சிகள் – அற்புதமான திரையரங்க அனுபவம் – ஆகியவற்றுடன் டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்திற்கு ரசிகர்கள் துணிச்சலுடன் பிரபாஸின் ராஜ்ஜியத்திற்குள் வருகைத் தாருங்கள்.