Take a fresh look at your lifestyle.

‘மாமன்னன்’ வெற்றியை மிஞ்சுமா ‘மாரீசன்’ கூட்டணி?!

மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.

அப்படி, ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கும் இப்படத்தை ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நகைச்சுவையாக தொடங்கும் இந்தப் படத்தின் டீசரில் இறுதியில் த்ரில்லர் படம்போல முடிவடைகிறது.