Take a fresh look at your lifestyle.

‘சூர்யா-44’ படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும், தயாரிப்பாளருமாக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் இப்படத்தின் ட்ரைலர், ஆடியோ லான்ச், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவாவிற்கு பின் சூர்யாவின் அடுத்த படம் சுதா கொங்கரா அல்லது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகர் சூர்யா வேறு சில படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#சூர்யா_44 #Surya 44 #இயக்குநர்_கார்த்திக்_சுப்புராஜ் #Director_Karthick_Subburaj #நடிகர்_சூர்யா #Actor_Surya #2டி_என்டர்டெயின்மென்ட் #2D_Entertainment #ஸ்டோன்_பெஞ்ச்_நிறுவனம் #Stone_Bench_production