Take a fresh look at your lifestyle.

தமிழில் ரிலீசாகும் அக்ஷய்குமார் பட டிரைலர்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள `படே மியான் சோட்டே மியான்’ என்ற படம் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அக்சயகுமார் நாயகனாகவும் சோனாக்ஷி சின்ஹா நாயகியாகும் நடித்துள்ள இந்தப் படத்தில் பிரித்விராஜ், மனுஷி சில்லார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அப்பாஸ் ஜாபர் என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்திற்கு விஷால் மிஸ்ரா இசை அமைத்துள்ளார். இந்த;ப படத்தின் டிரைலரை பார்க்கும்போது இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் மட்டுமின்றி வித்தியாசமான சயின்டிஃபிக் கதையாகவும் உள்ளது. இந்தப் படம் அக்ஷய்குமாருக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும்.

இப்படி ஒரு உலகத்தை இந்த உலகம் பார்த்து இருக்காது போன்ற ஆவேசமான வசனம், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், சைக்கோ வில்லனை அடக்குவதற்காக அக்ஷய்குமார் எடுக்கும் அவதாரம் என பல காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

– தேஜேஷ்

#அப்பாஸ் ஜாபர் #Abbas Jaffer #அக்ஷய்குமார் #Akshaykumar #படே மியான் சோட்டே மியான் #Bade Miyan Chote Miyan #சோனாக்ஷி சின்ஹா #Sonakshi sinha #பிரித்விராஜ் #Prathviraji 3மனுஷி சில்லார் #Manushi Chhiller