அறிமுக இயக்குநர் எம்.கோபி இயக்கும் படம் ‘யாதும் அறியான்’. அறிமுக நடிகர் தினேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு காட்டு பங்களாவில் நண்பர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சைக்கோ, திரில்லர் ஜானரில் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதோடு, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை யாரும் கையாளத ஒரு புதிய யுக்தியை இயக்குநர் எம்.கோபி கையாண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் வெளியிட்டதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதனிடையே, இந்த டிரைலரை பார்வையிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிப்பு, தயாரிப்பு என்று பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், புதியவர்களின் புதுமையான முயற்சியை அறிந்து, ‘யாதும் அறியான்’ படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

டிரைலர் மிரட்டலாக இருப்பதோடு படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும்படி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இயக்குநர் எம்.கோபி, இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், ‘எம்.ஐ3 முருகேசன்’ என்ற யூடியுப் இணையத் தொடரையும் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ‘தி பிளைண்ட் டைரக்டர்’ (THE BLIND DIRECTOR) சிறந்த குறும்படத்திற்கான தேசிய அளவிலான விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் புதுமுகம் என்றாலும், இந்தப் படத்திற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் தினேஷின் நடிப்பு நிச்சயம் பராட்டு பெறும் என இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.