எஸ்.பி.ஏ. புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘மகேஸ்வரன் மகிமை’. கதை எழுதி இயக்கித் தயாரித்து, முக்கிய கேரக்டரில் ஆர்.தவமணி நடித்துள்ளார்.
ஹரிஹரன், செழியன், ஆசிஃபா, கோபி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசியவை:
“தமிழில் ஆண்டுக்கு 240 படங்கள் தயாராகிறது. கடந்த ஆண்டில் பூஜையுடன் நின்ற படங்கள், கால்பாகம் முடிந்த படங்கள், பாதியளவு முடிந்த படங்கள், முடித்தும் வெளியிட முடியாத படங்கள் என்று எவ்வளவோ படங்கள் முடங்கியுள்ளன. படத்தைத் தயாரிப்பதை விட, அதை வெளியிடுவது கடினமாக உள்ளது.
கியூப்புக்கு பணம் கட்டுவது, பப்ளிசிட்டி செய்வது ஆகியவற்றுக்கு 50 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. கியூப்புக்கு பணம் கட்ட முடியாமல் 70க்கும் மேற்பட்ட படங்கள் தவிக்கின்றன. எனவே, தயவுசெய்து சிறு பட்ஜெட் படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்” என்று கே.ராஜன் கோரிக்கை விடுத்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.