Take a fresh look at your lifestyle.

இயற்கைக்கும் இசைஞானிக்குமான நெருக்கம்!

அக்னி நட்சத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது.

அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாகக் கொண்டது அந்தப் பாடல். அந்த ராகத்தை முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாம்.

மாதிரிப் பதிவை (Track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். “அமிர்தவர்ஷினி ராகத்துல இருக்கு. மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க” என்று கூட சொன்னார்களாம்.

பாடல் பதிவும் முடிந்தது. Studio-வை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி.

யாரும் வீட்டுக்குக் கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, அந்த மதியத்தில். யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில்.

இது, எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது.

– நன்றி: முகநூல் பதிவு.

#அக்னி_நட்சத்திரம் #Agni_natchathiram #தூங்காத_விழிகள்_ரெண்டு_பாடல் #Thoongatha_vizhigal_rendu_song #பதிவு #recording #ஜேசுதாசு #Jesudas #ஜானகி #Janaki