Take a fresh look at your lifestyle.

‘அதி மனோகரம்’ – மோகன்லாலின் 366-வது படம்!

மெகா வெற்றி பெற்ற ‘துடரும்’ படத்தை அடுத்து அதன் இயக்குநர் இயக்குநர் தருண் மூர்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் மோகன்லால்.

அவருடைய 366-வது திரைப்படமான இதில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார். ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சித்திரை விசுவை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இப்படத்துக்கு ‘அதி மனோகரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.