எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘குஷி’ படத்தில் ஜென்னியும், சிவாவும் நல்ல ஃபேராவே ஆடியண்ஸ்க்கு தெரிவாங்க. அப்படிக் காட்சிகளை மட்டுமே கதையோட ஆரம்பத்தில் இருந்தே இயக்குநர் வெச்சிருப்பாரு.
ஆனா பாதியில் அவங்களுக்கு இடையே ஏற்படும் பிளவு. படம் முன்பே பார்த்திருந்ததால் பெரிய அதிர்ச்சியை கொடுக்காமல் இல்லை. முதல்முறை பார்க்கும்போதும் இந்த நுணுக்கமான காட்சி ஆச்சர்யத்தையே கொடுத்தது.
அதிகமான மோதல், ரொம்பவே கொஞ்சமான காதல். இதுதான் இந்தக் கதையோட ஸ்பெஷல். அந்தப் பிளவுக்குப் பின், தன் நண்பர்களோட காதலுக்காக மட்டுமே சேர்ந்திருப்பாங்க. ஒரு கைக்களப்பில் சிவாவைக் காப்பாற்ற போய் ஜெனி ஹாஸ்பிட்டல்ல இருப்பாங்க.
அந்தக் கொஞ்சமே காதல் ரொம்ப அழகா ஸ்கிரின் முழுக்க தழும்பும் ஒரு சின்ன காட்சி அது.
ஜெனிக்கு உதவியாக இருந்து ஊசி இடுப்பில் போட ஹெல்ப் பண்ண அந்தப் பழைய காட்சியை நினைத்துப் புலம்பியபடியே சிவா வெளியேறிடுவார்.
க்ளோஸப் ஜெனிக்கு மட்டுமே இருக்கும். அந்த முகம் முழுக்க பழைய ஈகோ சுத்தமா இல்லாமல் கறந்த பாலைப் போல தூய்மையான காதல் மட்டுமே இருக்கும்.
அப்படியே டாக்டர் இடுப்பில் ஊசி போடுவதை மைக்ரோ செகண்ட்ல நமக்கு உணர்த்தி மீண்டும் அந்த முகம் பழைய காதலுக்கே போகும் தருணம்.
இப்படி ஒரு சீன் கம்போஸ் பண்ணி ஸ்கிரீன்ல கொண்டு வந்ததும். அந்த அழகான காட்சியை தானே கூடுதல் அழகாக்காமல் அதற்கு தேவா தேர்ந்தெடுத்தது சாதனா சர்கம்மை.
‘யார் சொல்வதோ, யார் சொல்வதோ’
இந்த இரு வார்த்தையிலே அந்தக் காதலும் அந்தக் காட்சியும் அதன் முழு நிறைவை அடைஞ்சிடும். அதற்குப் பின்னான அந்தப் பாடல் வெறும் ஆடியண்ஸுக்கான போனஸ் மட்டும்தான்.
எஸ்.ஜே. சூர்யாவை மீண்டும் படம் இயக்கச் சொல்ல மனம் ஏங்குகிறது. லோக்கல் சேனலில் குஷி ஓடிக் கொண்டிருக்கிறது.
– நன்றி: முகநூல் பதிவு.