Take a fresh look at your lifestyle.

திரைக்கதையால் ரசிகர்களை மிரட்டிய ‘அதே கண்கள்’!

192
‘அதே கண்கள்’ படத்தில் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசுகள் எல்லாருமே வரிசையா கொலை செய்யப்பட, கடைசியாக மிஞ்சி இருப்பது காஞ்சனாவும்,
 
அவரது சித்தப்பா அசோகனும் மட்டும் அவர்களுக்கும் கொலைகாரன் குறிவைப்பதை உணர்ந்து, காஞ்சனாவின் காதலராக வரும் ரவிச்சந்திரன் வீரத்துடனும் தீரத்துடனும் கொலைகாரனை கண்டுபிடிப்பது கதை.
 
தியேட்டரின் சீட்டின் நுனிக்கு வரவைக்கிற படம் என்றெல்லாம் சொல்றாங்கல்ல அப்படி சொல்றதுக்கு இப்படத்தை மட்டுமே எடுத்துக்காட்டாய் சொல்லலாம்.
 
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மெகர்பன் என்ற ஹிந்திப் படத்துக்காக போட்ட செட், அந்த படத்தில் செட் வந்திருந்தாலும்,
 
செட் முழுமையாய் வந்தது போல் ஒரு உணர்வை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு அளிக்காததால், இந்தாப்பா அந்த செட்டை அழிக்க வேண்டாம் இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.
 
அதற்கு என ஒரு படத்தை உருவாக்க ஏவிஎம் கதை இலாகாவில் இருந்த ஏ.சி.திருலோகச்சந்தரை கூப்பிட்டு கேட்க, இந்த செட்டுக்கு மர்மப்படம் தான் செட்டாகும் என ஏ.சி.திருலோகச்சந்தர் சொல்ல,
 
சரி அப்போ கிரியேட் பண்ணு கதையை என செட்டியார் சொல்லி, ஏவிஎம் நிறுவன கதை இலாகாவினர் திருலோகச்சந்தருடன் கதையை மெருகேற்றி படத்தை எடுத்து வெளியிட்டு படம் நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது.
 
அப்போ பத்தாயிரம் சம்பளமாம் ஹீரோ ரவிச்சந்திரனுக்கு. படத்தில் வில்லனா நடித்தவர் வசந்தகுமார் இவர் தபால்துறையில் வேலை செய்தாராம், க்ளைமாக்ஸில் என்னையுமா என அப்பாவி பெரியவராய் கேட்டு டக்கென இளைஞராய் மாறி அதகளம் செய்திருப்பார்.
 
நடிப்பதற்கு இவரை தேர்வு செய்த திருலோகச்சந்தர், படத்தின் கதைப்படி கண்கள் திரையில் மிரட்ட வேண்டும் என சிலோன் விஜயேந்திரன் என்று இலங்கையில் இருந்து நடிப்பு ஆசையில் வந்தவரை அந்த கண்கள் தோன்றும் காட்சியில் மட்டும் நடிக்க வைத்தாராம்.
 
ஏனென்றால் கண்கள் அவ்வளவு அனலாக இருந்திருக்கிறது. அவரின் கண்கள் மட்டுமே நடித்திருக்கிறது.
 
படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் க்ளைமாக்ஸ் பற்றி யாரிடமும் சொல்லிவிடாதிர்கள் என வரும் மேஜர் சுந்தரராஜனின் வாய்ஸ்,
 
சுசீ என கொக்கரித்து குரல மட்டும் மிரட்டும் வில்லனின் வாய்ஸ், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி,
 
வா அருகில் வா பாடல் என 1967-யை கொண்டாடும் விதமாக வரும் ஒரு க்ளப் டான்ஸ், நாகேஷின் பெண் காமெடி, கருணாநிதியின் சமையல் காமெடி,
 
இசையமைப்பாளர் வேதாவின் இசை, அழகிய நடிகையாக காஞ்சனா என இப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை தவிர்த்து சொல்ல அத்தனை ப்ளஸ்கள் உண்டு.
 
இப்படிலாம் படம் பார்த்து வளர்ந்தோம், நான் ஒண்ணும் இந்த படம் வந்த காலகட்டத்தை சேர்ந்தவனுமல்ல, என் அப்பா, அம்மா தலைமுறை காலத்து படம் எனக்கு பிடிக்கிறதல்லவா,
 
தற்போது வரும் படங்கள் ஆரம்பிக்கிறது என்னவோ நல்லாதான் இருக்கு முழுசா அதை க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்று முடிக்கிறார்களா என்றால் இல்லனுதான் சொல்லணும்.
 
படம்னா என்னனே தெரியாம நாம இம்புட்டு தெளிவா எழுதும்போதே சில புதிய படங்களின் குறைகளை விமர்சனம் செய்யும்போது சில அரைகள்.
 
அப்போ நீ வேணா படம் எடு என சொல்லுகிறதுகள், முதல்ல படம் என்றால் எப்படி இருக்கணும்னு என இதுகளுக்கு யாராவது க்ளாஸ் எடுங்க.
 
தூக்கிப் போட வேண்டிய ஒரு பழைய செட்ட வச்சுக்கிட்டு எப்படி படம் எடுத்திருக்காங்க பாருங்க. பழைய படங்கள் எப்பவுமே ரொம்ப சிறப்பு வாய்ந்தது தான்.
 
– அபிராம் அருணாச்சலம்