பேசும் படம்:
பொதுவுடைமைக் கருத்தை தன் நகைச்சுவை மூலம் திரைப்படங்களில் பிரதிபலிப்பாய் நடித்தவர் கவுண்டமணி.
அரசியல், குடும்ப உறவு, சமூகநீதி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை நகைச்சுவையில்தன் பாணியில் சொன்ன இந்த நூற்றாண்டின் சிறந்த கலைஞன்.
ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், பிரபு ஏன் ஆரம்பித்து விஜய், அஜித், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள கவுண்டமணியின் இடத்தை இன்றளவும் ஈடு செய்யும் நகைச்சுவை நடிகர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயராம், குஷ்பூ நடித்த நகைச்சுவை குடும்பத் திரைப்படம் ‘முறைமாமன்’.
இந்தப் படத்தின் மூலம்தான் சுந்தர்.சி இயக்குநராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
காதல், மோதல், நகைச்சுவை பாசம் என்று முழு பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக 1995-ல் வெளியான ‘முறைமாமன்’ படம் நகைச்சுவை கலந்த குடும்ப திரைக்கதையின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.
ஜெயராம், கவுண்டமணி, மனோரமா, செந்தில் இவர்களின் நகைச்சுவை கலந்த நடிப்பு மிகவும் ரசிக்க தக்க விதத்தில் அமைந்தது.
குறிப்பு – முறைமாமன் படப்பிடிப்புத் தளத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணி இவர்களுடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.