Take a fresh look at your lifestyle.

இன்னும் நீள்கிறது நடிப்பின் மீதான தேடல்!

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தற்போது பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடித்த ‘சிஸ்டம்’ என்ற வெப் தொடர் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகா பேசிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

அதில், “அரசுப் பள்ளி ஆசிரியை முதல் வக்கீல் வரை பெண்களை மையப்படுத்தும் அனைத்துக் கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். குடும்பத் தலைவியாகவும் பல படங்களில் நடித்துள்ளேன்.

தற்போது என் தேடல் நீண்டிருக்கிறது.

புதுமையான, வித்தியாசமான கதாபாத்திரத்தை தேடுகிறேன். வித்தியாசமான அந்த முயற்சிக்காக காத்திருக்கிறேன்.

அதற்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.