Take a fresh look at your lifestyle.

மீண்டும் கிளாமரில் களமிறங்கிய சமந்தா!

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் காட்சியில், படுகவர்ச்சியாக நடனமாடி இருந்தார் சமந்தா.

நாயகியாக நடித்து வந்த அவர், முதலில் குத்தாட்டம் ஆடியது இந்த படத்துக்குத்தான். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில், மீண்டும் சமந்தா கவர்ச்சி நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ் குமார், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகும் ‘பெத்தி’ என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் சமந்தா நடனமாடுகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் பாடலுக்கு சமந்தா கிளாமர் டான்ஸ் ஆட இருக்கிறார். அந்தப் பாடல் காட்சியில் ராம் சரணுடன் இணைந்து சமந்தா நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். 7 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் இணையும் படமாக ‘பெத்தி’ அமைந்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி