Take a fresh look at your lifestyle.

‘ரோலக்ஸ்’ படத்தில் சூர்யா!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சூர்யா தோன்றுவார்.

இந்தக் கேரக்டரை வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், ரஜினி படத்தை அடுத்து ‘ரோலக்ஸ்’ படத்தை இயக்குவார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் `கங்குவா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் பிரபல நடிகர் வருண் தவான் ‘ரோலக்ஸ்’ படம் குறித்த கேள்வி எழுப்பியபோது ‘ரோலக்ஸ்’ படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறியதை அடுத்து ‘ரோலக்ஸ்’ படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘கங்குவா’ படத்தை அடுத்து `அயலான்’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்தப் படமாக ‘ரோலக்ஸ்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`விக்ரம்’ படத்தில் ஐந்து நிமிட கேரக்டரிலேயே மிரட்டிய சூர்யா ‘ரோலக்ஸ்’ படத்தை முழுமையாக எடுத்தால் எப்படி நடிப்பார் என்பதை நினைத்து பார்க்கவே மிரட்சியாக உள்ளது.

– தேஜேஷ்