கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் உட்பட இந்த வாரம் வெளியாகவுள்ள ஓடிடி திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் டிவி ரக்சன் நடித்த `மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.
அதேபோல் ஆகா ஓடிடியில் ‘மிக்ஸ்அப்’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த வாரம் இந்த இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது.
அதே நேரத்தில் ஜெயராம், மம்முட்டி நடித்த படம் `ஆப்ரஹாம் ஓஸ்லர்’ என்ற திகில் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற `ஃபைட்டர்’ என்ற திரைப்படம் இன்று நெட்பிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரன்சிங் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியிருந்தார்.
அதேபோல் ஆஸ்கார் பரிசுகளை அள்ளிக் குவித்த `ஓப்பன் ஹெய்மர்’ என்ற திரைப்படம் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்த படம் 7 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
– தேஜேஷ்