ரமேஷ் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘தெகிடி’.
நல்ல கதை மூலம் தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ரமேஷ், தற்போது 11 ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தெகிடி படக் கூட்டணி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் அசோக் செல்வன். அதைத் தொடர்ந்து, ‘பிட்சா 2’, ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’, ‘ஃபுளூ ஸ்டார்’, ‘போர்த் தொழில்’, ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ போன்ற திரைப்படங்கள் மூலம் ஹீரோவாக நடிக்கத் துவங்கினார்.
இதில் ‘தெகிடி’ அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படத்தில் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.