Take a fresh look at your lifestyle.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் ரவீனா!

48

பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரவீனா தாண்டன், இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் ஜோடியாக ‘சாது’ படத்தில் நடித்தார்.

இந்தப் படம் 1994ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் 2001 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘ஆளவந்தான்’ படத்தில் கமலுடன் நடித்தார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ படத்தில் நடிக்க ரவீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிக்கும் 3–வது தமிழ் படம் இது.

‘ஜெண்டில்வுமன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜோஷ்வா சேதுராமன் ‘லாயர்’ படத்தை இயக்குகிறார். ‘லாயர்’ படத்தில் ரவீனா நடிப்பது குறித்து இயக்குநர் ஜோஷ்வா கூறியதாவது:

“1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்கூல்’ என்ற படத்தில் ரவீனா மேடத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ‘லாயர்’ படத்தில் ரவீனா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என தோன்றியது.

மும்பையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் ரவீனாவைத் தொடர்பு கொண்டேன் – ‘ஜெண்டில்வுமன்’ படத்தைப் பார்த்துவிட்டு எனது படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யுங்கள்’ என சொன்னேன்.

ரவீனா அந்தப் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு பிடித்திருந்தது. ‘லாயர்’ படத்தின் கதையை கேட்டார். உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

விஜய் ஆண்டனிக்கும், ரவீனாவுக்கும் இந்தப் படத்தில் சமமான கேரக்டர்கள்” என்கிறார் ஜோஷ்வா சேதுராமன்.

விஜய் ஆண்டனி, தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ‘லாயர்’ படத்தை தயாரிக்கிறார். அடுத்த  மாதம்  படப்பிடிப்பு தொடங்குகிறது.

நீதிமன்றப் பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.

– பாப்பாங்குளம் பாரதி.