கன்னட சினிமா மூலம், திரை உலகில் அடி எடுத்து வைத்த ராஷ்மிகா மந்தனா, இப்போது தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் ‘பிசி’யாக இருக்கிறார்.
அண்மையில், தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா-2, சாவா ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. ‘ஹாட்ரிக்’ வெற்றி அடித்தார் ராஷ்மிகா.
ஆனால், நம்ம ஊர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் ஜோடியாக அவர் நடித்த ‘சிக்கந்தர்’ படுதோல்வி அடைந்தது.
இப்போது தனுஷின் குபேரா, தாமா ஆகிய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘பான் இந்தியா’ திரைப்படமாக இது உருவாக உள்ளது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க ராஷ்மிகாவுக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டது.
‘சிக்கந்தர்’ தோல்வியடைந்ததால், ராஷ்மிகாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல். அவருக்குப் பதிலாக வேறு கதாநாயகியைத் தேர்வு செய்ய இயக்குநர் தரப்புக்குத் தயாரிப்பாளர் அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
சினிமாவில் திறமைகள் மதிக்கப்படுவதில்லை – ஒரு படத்தின் வெற்றி – தோல்வியே முக்கியமானதாக கருதப்படுகிறது என்பதற்கு ராஷ்மிகா ஆகச்சிறந்த உதாரணம்.
– பாப்பாங்குளம் பாரதி.