‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடிப்பில் உருவான படம் ‘குட் பேட் அக்லி’.
அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், கார்த்திகேய தேவ், பிரியா பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள, இந்தத் திரைப்படம் நேற்று (10.04.2025) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
அஜித், ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப்போனது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படம், இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ 28.50 கோடி வசூல் செய்துள்ளது.
நேற்று முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் ஓரிரு நாட்களில் ‘குட் பேட் அக்லி’ ரூ. 100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.