Take a fresh look at your lifestyle.

என்னுடைய நடிப்பு பேசப்படுவதற்கு காரணம்!

நடிகை நிமிஷா சஜயன்

அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், வெளிவந்துள்ள படம் ‘டிஎன்ஏ’.

ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை நிமிஷா சஜயன், “ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ஹிட் ஆகுமா, ஆகாதா? என்ற பதற்றம் இருந்து கொண்டிருக்கும்.

ஆனால், இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் பதற்றம் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.

இயக்குநர் நெல்சன் ஃபோன் செய்து படம் வெற்றி என சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால், அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததைத் தான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. ஒவ்வொரு படத்திலிருந்தும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் மனதுக்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர்.

படப்பிடிப்புத் தளத்தில் அவருடைய ஒத்துழைப்பை மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா கதாபாத்திரம் இல்லை” என்றார்.