இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’.
மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக வரும் காதலுக்குள் மிக முக்கியமான உளவியல் சிக்கலைப் பேசுகிற படம்.
இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதுகுறித்து பேசிய பட வெளியீட்டாளர் G தனஜ்செயன், ‘நல்ல திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு’ இதன் காரணமாக தான் இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டேன்.
சிறந்த படம் என்றும் பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது ‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம்.
இந்தப் படம் தற்போது Tent kotta ott தளத்தில் வெளியாகியுள்ளது