Take a fresh look at your lifestyle.

குரு காணிக்கையாக இசைக்கச்சேரி நிகழ்த்திய எம்.எஸ்.வி!

பேசும் படம்:

மெல்லிசை மன்னர்களின் குருநாதர், பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. மெல்லிசைக்கும் கர்நாடக சங்கீத இசைக்கும் முன்னோடி என்று தமிழிலும் தெலுங்கிலும் இன்றைக்கும் சுப்பையா நாயுடுவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகத்தாரும் ரசிகர்களும்.

1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு, 76-ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால் படுத்தபடுக்கையானார். அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். ஒருலட்சம் ரூபாயை சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார்.

இந்தக் கச்சேரியை எம்.எஸ்.வி தன் குருநாதருக்காக நடத்தினார். குருநாதரின் சிகிச்சைக்காகவும் அவரின் குடும்பத்துக்காகவும் நடத்தினார். 

மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார். திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்கவேண்டும் என்பதை, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும் ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக் கொண்டோம்.

“இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்” என்று மெல்லிசை மன்னர்கள் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்கள் பல மேடைகளில்!

குறிப்பு: விழா ஒன்றில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

  • நன்றி : முகநூல்பதிவு