கடந்த ஆண்டில் (2024) தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாக முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்தவர்கள் நயன்தாராவும் த்ரிஷாவும்
தற்போது இந்த நடிகைகளை ஓவர்டேக் செய்து சில நடிகைகள் இந்த ஆண்டின் 2025-ல் அதிகம் சம்பளம் பெற்ற நடிகைகளின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளனர்.
அந்த நடிகைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
சாய் பல்லவி:
2024-ல் வரை ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த நடிகை சாய் பல்லவி. ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பின் தனது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமாகியுள்ளார் சாய் பல்லவி. பாலிவுட்டில் ‘இராமாயணம்’ படத்தில் நடிக்க ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்று அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
நயன்தாரா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது, சுந்தர் சி இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரூ. 15 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
ராஷ்மிகா மந்தனா:
அனிமல், புஷ்பா, புஷ்பா 2 போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து வெற்றியைக் கண்ட நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளார்.
தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக ரூ.13 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் ராஷ்மிகா.
த்ரிஷா:
கடந்த 2024-ல் ஆண்டு அதிகம் சம்பளம் பெற்ற நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்த த்ரிஷா தற்போது 2025-ல் 4 – வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ‘விஸ்வம்பரா’ படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
சமந்தா:
சினிமாவில் இருந்து விலகி இருந்து, தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிய சமந்தா நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடெல்’ வெப் தொடர் வெளிவந்தது. இதில் நடிக்க சமந்தா ரூ. 10 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார்.
பூஜா ஹெக்டே:
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் பூஜா ஹெக்டே 6-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.7 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
தமிழில் தற்போது செம பிசியான நாயகி என்றால் அது பூஜா ஹெக்டே தான். இவரது கைவசம் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவின் ரெட்ரோ மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.




