Take a fresh look at your lifestyle.

ரசிகர்களின் அன்பினால் திகைத்துப் போயுள்ளேன்!

'வார் 2' டீசர் குறித்து ஜூனியர் என்.டி.ஆர்.

68

அயன் முகர்ஜி இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள ‘வார் -2’ திரைப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘வார்-2’ டீசர் மூலம் அகில இந்திய அளவில் ஜூனியர் என்.டி.ஆருக்கு மாபெரும் புகழ் வெளிப்பட்டது.

ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் என்ற படவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்தப் படத்தில் சூப்பர்-ஸ்பை என்ற அவரது நடிப்பு பற்றிய விவாதம் இணையத்தில் மிக வேகமாக பரவியுள்ளது.

இதனிடையே இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள பாராட்டினால் ஜூனியர் என்.டி.ஆர் பெருமிதம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜூனியர் என்.டி.ஆர்., “ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம். இதன்மூலம் மக்களின் நிபந்தனையற்ற அன்பை அனுபவிக்க முடிகிறது.

‘வார்-2’ டீசர் மூலம்  நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துப்போயுள்ளேன்.

இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நல்ல சினிமாவைப் பார்க்க விரும்பும் நபர்களிடமிருந்தும் இதுபோன்ற அன்பைப் பெறுவது இன்னும் உற்சாகமாக இருக்கிறது.” என்றார்.