Take a fresh look at your lifestyle.

கமலுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

கமல்ஹாசன் இந்தியில் நடித்த ‘சாச்சி 420’, தமிழில் நடித்த ‘ஹே ராம்’ ஆகிய படங்களில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். கதாநாயகி ஆன பின், கமல் படத்தில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:

“ரஜினி சாருடன் நான் நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கான டப்பிங் நடந்து வருகிறது. படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்.

ப்பா கமல் நடித்த ‘தக் லைஃப்’ படத்தின் பாடலைப் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி. அப்பா படத்தில் பாடியதை நினைத்து சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முதல் காட்சியை, சென்னையிலுள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசிப்பேன்.

ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

என் அப்பா கமல்ஹாசன் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். அவர் கேட்டால் உடனே கால்ஷீட் கொடுப்பேன்” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

– பாப்பாங்குளம் பாரதி.