Take a fresh look at your lifestyle.

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…!

திரைத் தெறிப்புகள் – 19

*
1954-ம் ஆண்டு நாமக்கல் கவிஞரின் கதையை மையமாக வைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படம் அந்தக் காலத்தில் தேசிய விருது பெற்றிருப்பது தனிச் சிறப்பு.

எம்.ஜி.ஆரின் திரைப் பயணத்தில் ‘மலைக்கள்ளன்’ குறிப்பிடத்தக்க படம்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற…

“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் –
இந்த நாட்டிலே….”

– என்ற பாடலைத் தன்னுடைய வழக்கமான உச்சஸ்தாயிக் குரலில் அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

நடிகை பானுமதி, சக்கரபாணி என்று பலரும் இடம் பெற்றிருந்த இந்தத் திரைப்படத்தில் இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும்.

“சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.

பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி…” (எத்தனை)

– என்று நீண்டுகொண்டே போகும் இந்தப் பாடல் பல சமூகச் செயல்பாடுகளை முன்வைத்த பாடலும் கூட.

“தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்.
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் .

கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் .
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்.”

என்று ‘மலைக்கள்ளன்’ கதாபாத்திரம் தானும், சமூகமும் செய்ய வேண்டிய பல பணிகளைப் பட்டியலிட்டிருப்பது இந்தப் பாடலுக்கு தனிச் சிறப்பு தகுதியைத் தந்திருக்கும்.

மிகவும் பிரபலமான இநதப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமைய்யா தாசா அல்லது வேறு பாடல் ஆசிரியரா என்பது பற்றிய குழப்பம் தற்போது வரை நீண்டுகொண்டே இருக்கிறது.

#மலைக்கள்ளன் #Malaikallan #மக்கள்_திலகம்_எம்ஜிஆர் #Makkal_thilagam_MGR #நாமக்கல்_கவிஞர் #Namakkal_kavignar #டி_எம் _சௌந்தர ராஜன் #TM_Soundararajan #நடிகை_பானுமதி #Actress_Banumathi #சக்கரபாணி #Sakkarapani #தஞ்சை_ராமைய்யா_தாஸ் #Thanjai_Ramaiah_das